தமிழ் உறவுகளுக்கு என் இனிய தமிழ் வணக்கம், வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம், அந்த வரம் இனிதாக அமைய இல்லறம் என்ற அமைப்பை இறைவன் நமக்கு வழங்கி உள்ளார். இல்லறம் இனிதே அமைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அம்மன் திருமண தகவல் மையம் என்ற பெயரிலே திண்டுக்கல்லில் நடத்தி வந்தோம். பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையில் பெஸ்ட் திருமண தகவல் மையம் என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கினோம். இந்த மென்பொருள் மூலம் சேவை செய்து வந்தோம். இந்த சேவை அனைத்து சமூகத்திற்கும் வெற்றிகரமாக பயனுள்ளதாக அமைந்தது, அதன் அடிப்படையில் உலகம் வேகமாக செல்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வேகத்தை ஈடு கொடுக்கும் வகையில் சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப இன்று ஏற்பட்ட மாற்றத்திற்கும் ஏற்ப மணமகன் மணமகள் தேடும் சேவையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இருந்த இடத்திலேயே பதிவேற்றம் செய்யவும் மற்றும் பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தங்களின் வாழ்க்கை துணையை தேடுவதற்கு எளிதாக www.tamilarkalyanamalai.com என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். மேலும் 09-10-2025 முதல் இந்த சேவை செயல்பட உள்ளது. இருமணம் இனிதே இணைய எங்களின் இதயம் கலந்த வாழ்த்துக்கள்.